பாகிஸ்தானில் இந்து திருமண மசோதா சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் திருமணத்தின் போது இந்துக்கள் தங்கள் மதச்சடங்குகளை முறைப்படி செய்ய வழிவகை செய்கிறது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளதன் காரணமாக இதுவரை அவர்களுக்கு தனியான திருமண சட்டம் இருக்கவில்லை.
இதனால் பல வருடங்களாக முறைப்படி இந்து திருமண சட்டம் உருவாக்க வேண்டுமென கோரிக்கைகள் இருந்து வந்த நிலையில் பாகஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தில் இந்து திருமண சட்ட மசோதாவை தாக்கல் செய்தது.
இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதனையடுத்து நேற்றையதினம் பாகஸ்தான் ஜனாதிபதி மம்கைன் உசேன் கையெழுத்திட்டதை தொடர்ந்து இந்து திருமண மசோதா சட்டம் ஆனது. இதன்மூலம் பாகிஸ்தானில் இந்துக்கள் திருமணம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்துக்களின் திருமணங்கள் பதிவு செய்யப்படும் எனவும் அதற்காக அரசாங்கமே பதிவாளரை நியமிக்கும் என்பதுடன்; இந்துக்களின் திருமணம், மணமுறிவு, மறுமணம் மற்றும் குடும்ப அமைப்பு உள்ளிட்டவையும் வகைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது