இந்தியாவில் மத்திய அரச அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளானால், அவர்களுக்கு விசாரணை இடம்பெறும் காலத்தில் 90 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர் அல்லது உயர் அதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது, அது குறித்து விசாரிக்க அந்தந்த நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவிடம் பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட தொந்தரவுகள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையிலேயே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடுமுறையானது பாலியல் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் விடுப்பு காலத்தினுள் இது உள்ளடங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.