ருவான்டாவில் இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் தேவாலயங்களின் பங்களிப்புக்களுக்காக புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். 1994ம் ஆண்டில் ருவான்டாவில் இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காகவே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ள அவர் மன்னிப்பு கோருதல் ருவன்டாவின் காயங்களை ஆற்றுப்படுத்த உதவும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த மன்னிப்பு கோரல் எவ்வித நலனையும் அளிக்காது என தெரிவித்துள்ள ருவான்டா அரசாங்கம் இனச்சுத்திகரிப்புக்களில் ஈடுபட்டவர்களை உள்நாட்டு தேவாலயங்கள் தொடர்ந்தும் பாதுகாத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. ருவன்டாவின் சிறுபான்மை சமூகமான Tutsi இனத்தைச் சேர்ந்த 800,000 பேர் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment