எகிப்து, கட்டார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து மடிக்கணணி உட்பட சில இலத்திரனியல் பொருட்களை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. எனினும் கைத்தொலைபேசி மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது
எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கட்டார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளிலிருந்தே குறித்த இலத்திரனியல் பொருட்களை எடுத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்தடையானது இன்றுமுதல் அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உளவுத் துறையால் திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.