Home இந்தியா இணைப்பு -2 சபாநாயகரை பதவி நீக்க கோரும் திமுகவின் தீர்மானம் தோல்வி – தனபால் தொடர்ந்தும் சபாநாயகராக நீடிப்பார்

இணைப்பு -2 சபாநாயகரை பதவி நீக்க கோரும் திமுகவின் தீர்மானம் தோல்வி – தனபால் தொடர்ந்தும் சபாநாயகராக நீடிப்பார்

by admin

சபாநாயகர் தனபாலை பதவி நீக்கக் கோரும் திமுகவின் தீர்மானம், குரல் மற்றும் எண்ணி கணக்கெடுக்கும் முறைகளில் நடத்தப்பட்ட இரண்டு வாக்கெடுப்பிலும் தோல்வி அடைந்துள்ளது. ஸ்டாலின் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகளின்  97  சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆதரவு தெரிவித்தனர்.
குறைந்தபட்சம் 35 சட்டமன்ற உறுப்பினர்களின்  ஆதரவு இருந்தால் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில்  சபாநாயகர்  ப.தனபால் வெளியே சென்று விட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தீர்மானம் தொடர்பான அவையை நடத்தினார்.

இதன்  பின்னர் இடம்பெற்ற தீர்மானம் வாக்கெடுப்பில்  முதலில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் திமுகவின்  தீர்மானம் தோல்வியடைந்தது. இதன் பின்னர் தி.மு.க. கேட்டுக் கொண்டதற்கு இணங்க எண்ணிக் கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு  அந்த வாக்கெடுப்பிலும் திமுக தீர்மானம் தோல்வி அடைந்தது.

122 அதிமுக உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ள அதேவேளை  ஓபிஎஸ் அணியினர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். இதனால் சபாநாயகராக தனபால் தொடர்ந்து நீடிப்பார் என  அறிவிக்க்பபட்டுள்ளது.

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெறுகின்றது:-

Mar 23, 2017 @ 05:50
தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது பிரதான எதிர்க்கட்சியான திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பு இன்று நடைபெறுகின்றது. இது குரல் வாக்கெடுப்பாக நடைபெற உள்ளது.

ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி கடந்த 9ம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்டசபை செயலகத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

தனபால் மீது நம்பிக்கை இல்லாதது குறித்து திமுக முதலில் கருத்துகளை முன்வைக்கும். அடுத்து சபாநாயகர் தனபால் தமது தரப்பு வாதத்தை முன்வைப்பார்.

வாக்கெடுப்புக்காக சபை கதவுகள் மூடப்பட்டு பின்னர் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். தீர்மானத்தை ஆதரிப்போர் அல்லது எதிர்ப்போரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்தத் தீர்மானம் வெற்றியோ தோல்வியோ அடையும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More