கொழும்பு எலன் மெதினியாராமய விஹாரையின் விஹாராதிபதி உடுவே தம்மாலோக்க தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு ஏழு பகுதியில் அமைந்துள்ள எலன் மெதினியாராமய விஹாரையில் அதிகாலை வேளையில் சத்தமாக பிரித் பாராயணம் ஒலிபரப்புச் செய்யப்படுவதாகவும் இதனால் மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்படுவதாக தம்மாலோக்க தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தம்மாலோக்க தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
100,000 ரூபா ரொக்கப் பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமாலோக்க தேரரின் வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.