Home உலகம்புகலிடக் கோரிக்கையாளர் படகு விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்

புகலிடக் கோரிக்கையாளர் படகு விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்

by admin


லிபிய கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் கவிழ்ந்து நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் ,  படகு விபத்து காரணமாக  நீரில் மூழ்கியுள்ளனர் என தொிவிக்க்பபட்டுள்ளது.  புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் நீரில் மூழ்கிய ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. படகு விபத்தில் சிக்கியவர்களை  மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. லிபியா ஊடாக ஐரோப்பா நோக்கிப் பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More