125
ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்றைய தினம் குறித்த இராணுவ உத்தியோகத்தர்களை கைது செய்துள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி சுத்தமான குடி நீர் வசதியை வழங்குமாறு கோரி வெலிவேரிய ரத்துபஸ்வலவில் மக்கள் மேற்கொண்ட போராட்டம் மீது, படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 30 பேர் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love