அயர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் போட்டியின் போது கால் முறிவிற்கு உட்பட்டுள்ளார்.
அயர்லாந்து அணியின் தலைவர் Seamus Coleman இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியுள்ளார். வேல்ஸ் அணியுடன் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதி காண் போட்டியின் போது Seamus Coleman உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.
வேல்ஸ் அணியின் வீரர் Neil Taylor உபாதையை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உபாதை ஏற்படுத்திய காரணத்தினால் வேல்ஸின் நீல் டெய்லருக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. நில் டெய்லர் வேண்டுமென்றே காலை முறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோதவில்லை எனவும் போட்டியின் பின்னர் அவர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.