Home இலங்கைவட மாகாணத்திலுள்ள வெற்றிடங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – சி.வி.விக்னேஸ்வரன்

வட மாகாணத்திலுள்ள வெற்றிடங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – சி.வி.விக்னேஸ்வரன்

by admin


வட மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென   என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வட. மாகாண வேலையற்ற பட்டதாரிகளை முதலமைச்சர் நேற்றையதினம் தனது அலுவலகத்தில் சந்தித்து உரையாற்றிய போதேஇவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இன்று நடைபெறவுள்ள வட. மாகாண சபையின் அங்கத்துவக் கூட்டத்தில் வேலையற்ற மாணவர்களின் பிரச்சினை கவனத்தில் கொள்ளப்பட்டு, வட. மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களில் வேலையற்ற பட்டதாரிகளை நியமிப்பது தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி முதல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கால வரையறையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இதுவரை  பொறுப்புவாய்ந்த தரப்பினர்கள் தம்மை  சந்தித்துக் கலந்துரையாடவில்லை என குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More