Home இலங்கைஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலக அதிகாரிகள் இலங்கை செல்லவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலக அதிகாரிகள் இலங்கை செல்லவுள்ளனர்.

by admin


ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலக அதிகாரிகள் இலங்கை செல்லவுள்ளனர். இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர், எதிர்வரும் 14 நாட்களுக்குள் இலங்கைக்கு ஆறு தடவைகள் பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப்படுத்துவதற்கு   2 வருட காலஅவகாசம்  வழங்கி நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தப் போகிறது என்பது தொடர்பில் மதிப்பீடு செய்யும் நோக்கிலேயே  குறித்த குழுவினர் இலங்கைக்கு செல்லவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More