165
திடீர் சுகயீனம் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு பிணை வழங்கக் கோரி விமல் வீரவங்ச கடந்த புதன்கிழமை முதல் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே திடீர் சுகவீனத்திற்கு உள்ளானார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love