Home இலங்கைலசந்த கொலை தொடர்பில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி கைது செய்யப்படக்கூடிய சாத்தியம்

லசந்த கொலை தொடர்பில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி கைது செய்யப்படக்கூடிய சாத்தியம்

by admin


சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கொழும்பு தெற்கு போதான வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி சுனில் குமார கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லசந்த கொலை தொடர்பிலான விசாரணைகளின் ஊடாக இப்போது புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. லசந்தவின் கொலையானது தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும், மரணம் இடம்பெற்ற வேளையில் பிரரேத பரிசோதனை நடத்திய வைத்திய அதிகாரி சுனில் குமார, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக அறிவித்திருந்தார். சுனில் குமார விசாரணைகளை திசை திருப்பியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More