Home இலங்கைபெரும்பான்மை இன மாணவர்களுக்கு போட்டியாக கற்க வேண்டும் – தேசிய மட்டத்தில் 1ம் இடத்தினை பெற்றுக்கொண்ட அ.அபிநந்தன்

பெரும்பான்மை இன மாணவர்களுக்கு போட்டியாக கற்க வேண்டும் – தேசிய மட்டத்தில் 1ம் இடத்தினை பெற்றுக்கொண்ட அ.அபிநந்தன்

by admin


எதிர்காலத்தில் பெரும்பான்மை இன  மாணவர்களுக்கு போட்டியாக கல்வியில் நாமும் சாதனை படைக்க வேண்டும்  என தமிழ் மொழி மூலத்தில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்துக்கல்லூரி மாணவனான அ.அபிநந்தன் 9 பாடங்களிலும் யு தர சித்திகளை பெற்று தேசிய மட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.  குறித்த மாணவன் அது தொடர்பில் தெரிவிக்கையில் , எனது பெற்றோர் மற்றும் சித்தியின் ஊக்கமளிப்பினால் தான் இந்த உயர்ந்த பெறுபேறுகளை பெற முடிந்தது. உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானதுறையில் கல்வி கற்க விரும்புகிறேன்.  நோய்கள் பற்றிய ஆய்வுதுறையில் கற்பதே எனது இலக்கு என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More