இந்தியா

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் மீண்டும் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் தெரிவித் துள்ள மத்திய அரசைக் கண்டித்து நெடுவாசலில் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்ததனைத் தொடர்ந்து  நெடுவாசலில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதி மொழியையும், மத்திய அரசின் வேண்டுகோளையும் ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்தநிலையில் நெடுவாசல் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கடந்த27ம்திகதி  சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

மக்கள் எதிர்ப்பையும் மீறி, இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களின் மீது மத்திய அரசுக்கு அக்கறையின்மையை காட்டுகிறது எனவும்  எனவே, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுடன் ஆலோசனை செய்த பின், ஒரு வாரத்தில் மீ்ண்டும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply