ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ சவாலாக திகழ மாட்டார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக கோதபாயவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக போட்டியிட முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் கோதபாய ராஜபக்ஸவினால் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும், அதுவே கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவினை நிர்ணயம் செய்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோதபாய ராஜபக்ஸ ஓர் இராணுவ அதிகாரி எனவும், சிறந்த அரசியல்வாதி கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் அனைத்து இன மத மக்களினதும் ஆதரவினை பெற்றுக் கொள்ளும் ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.