ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் உரிய நேரத்தில் அமுல்படுத்தப்படும் என க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் ஏகமனதாக இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது எனவும் இந்த தீர்மானத்திற்கு 47 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கை ஒரு சில விடயங்களில் சிறிதளவு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகவும் எனினும் இன்னும் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. கால நிர்ணயத்தின் அடிப்படையில் தீர்மானத்தின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.