இலங்கை

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு மே மாதம் 5ம் திகதி விசாரணைக்கு


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. திவிநெகும திணைக்களத்தின் 29 மில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தி பசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப் படம் பொறிக்கப்பட்ட சிங்கள பஞ்சாங்கங்கள் அச்சிட்டு வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மே மாதம் 5ம் திகதி வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply