Home இலங்கை கிளிநொச்சியில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் முதலாவது நாளில் 97 இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் முதலாவது நாளில் 97 இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

by admin


கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் முதலாவது  நாளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மொத்தமாக மாவட்டத்தில் உள்ள வீடுகள், கல்வி நிறுவனங்கள், அரசநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள்,தொழிற்சாலைகள்,கட்டுமாணப் பகுதிகள்,மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொது இடங்கள் ஆகிய 6367 இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில்1858 இடங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டதுடன் 97 இடங்களில் டெங்குநுளம்பின் குடம்பிகள் காணப்பட்டன.  என  கிளிநொச்சி மாவட்ட சுகாதார பிரிவினர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தின் முதல் நாளான 29.03.2017 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது,4546 வீடுகள் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் 1151 வீடுகளில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டன. 53வீடுகள் டெங்கு நுளம்பின் குடம்பிகளுடன் காணப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள 19 பாடசாலைகள் பரிசோதிக்கப்பட்டதில் 09 பாடசாலைகளில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டன. இரண்டுபாடசாலைகளில் டெங்குநுளம்பின் குடம்பிகள் காணப்பட்டன.

58 தனியார் கல்வி நிறுவனங்கள் பரிசோதிக்கப்பட்டபோது38 நிலையங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டன. 02 நிலையங்கள் டெங்கு நுளம்பின் குடம்பிகளுடன் காணப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள 49;; அரச நிறுவனங்கள் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் 28 அரச நிறுவனங்களில்;; நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டன. 03 நிறுவனங்களில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் காணப்பட்டன.

166 தனியார் நிறுவனங்கள் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் 52 நிறுவனங்களில்;; நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டன. 03 நிறுவனங்களில் டெங்குநுளம்பின் குடம்பிகள் காணப்பட்டன.

36 தொழிற்சாலைகள்; பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் 20 தொழிற்சாலைகளில்;;; நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டன. 02 தொழிற்சாலைகளில் டெங்குநுளம்பின் குடம்பிகள் காணப்பட்டன.
97 கட்டிடநிர்மாணத் தளங்கள் பரிசோதிக்கப்பட்டதில் 67 தளங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டன. 11 கட்டிடநிர்மாணத் தளங்களில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் காணப்பட்டன.

94 சமய தளங்கள் பரிசோதிக்கப்பட்டதில் 28 தலங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டன. 02  சமயத் தலங்கள் டெங்கு நுளம்பின் குடம்பிகளுடன்காணப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள 47 பொது இடங்கள பரிசோதிக்கப்பட்டபோது,24 பொது இடங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டன. ஒருபொது இடத்தில் டெங்கு நுளம்பின் குடம்பிகள்; காணப்பட்டன.

1255 ஏனைய இடங்கள் பரிசோதிக்கப்பட்டபோது 441 இடங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டன. 18 இடங்களில் டெங்கு நுளம்பின் குடம்பிகள்; காணப்பட்டன.

மொத்தமாக மாவட்டத்தில் உள்ள வீடுகள், கல்வி நிறுவனங்கள், அரசநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள்,தொழிற்சாலைகள்,கட்டுமாணப் பகுதிகள்,மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொது இடங்கள் ஆகிய 6367 இடங்கள் இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில்1858 இடங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டதுடன் 97 இடங்களில் டெங்குநுளம்பின் குடம்பிகள் காணப்பட்டன.

மேற்படி 1858 இடங்களில் 1260 இடங்கள் இன்றைய தினமே சுத்திகரிக்கப்பட்டதுடன் 234 இடங்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நடவடிக்கைகளை கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் சுவேந்திரன் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர்; லிங்கம்; ,பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மருத்துவர் சுகந்தன் ,பூனகரி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர்; கோகுலனும் நெறிப்படுத்தியிருந்தனர்.

இந்த நான்கு பிரதேச செயலகப் பரிவுகளிலும் நடைபெற்ற விசேட  நடவடிக்கைகளை மலேரியா தடை இயக்க பொறுப்புவைத்திய அதிகாரிமருத்துவர் ஜெயராசா அவர்கள் ஒருங்கிணைத்தார். இவர்களுடன் நான்கு பிரதேச செயலகங்களது பணியாளர்கள் மற்றும் கிராமசேவை அலுவர்கள் ஆகியோர் கிராமமட்ட பொதுமக்கள் அமைப்புகள் மேற்கொண்ட இந்த விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு வாரச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கினர்.

வடமாகாணசுகாதார அமைச்சர் அவர்கள் மாகாணசபைஉறுப்பினர் கே.சயந்தன் அவர்களுடன் இணைந்து இயக்கச்சி ஆரம்பசுகாதார பிரதேசத்திற்குத் திடீர் வருகை புரிந்து விசேடகளப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஊக்கத்தினைவழங்கிச் சென்றனர்.

இன்றையவிசேடநடவடிக்கைகளின்போதுபொதுமக்கள் தமதுமுழுமையானஒத்துழைப்பினையும் பங்களிப்பினையும் வழங்கியதுடன்,அம்பாள்குளம்பகுதியில் தமதுகிராமத்தில் உள்ளஉழவு இயந்திரங்கள் மூலம் கழிவகற்றலையும் மேற்கொண்டுமுன்னுதாரணமாகச் செயற்பட்டனர்.

இதேவேளை, இன்றைய தினம் (30.03.2017) கரைச்சிப் பிரதேசத்தில் பாரதிபுரம்,கிருஷ்ணபுரம்,விநாயகபுரம் ஆகிய இடங்களிலும், பூனகரிப் பிரதேசத்தில் கிராஞ்சி, பொன்னாவெளி ஆகிய இடங்களிலும், பளைப் பிரதேசத்தில் மாசார் ,பளைநகரம் மற்றும் தம்பகாமம் ஆகியகிராமங்களிலும் கண்டாவளைப் பிரதேசத்தில் தருமபுரம் கிழக்குமற்றும்  மேற்கு,புளியம்பொக்கணைஆகியபகுதிகளிலும் நடைக்குழுவினர் வீடுவீடாகச் சென்றுவிசேடநடவடிக்கைகளைமேற்கொள்ளவுள்ளது மாவட்ட பொது சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More