161
யாழ்ப்பாணம் மற்றும் பதுளை மாவட்டங்களின் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 9லிருந்து 8 ஆக குறைவடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 6லிருந்து 7 ஆக உயர்வடைந்துள்ளது.
2016ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் இந்த ஆசன எண்ணிக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Spread the love