Home இலங்கைபோர்க்குற்றங்கள் – மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் – லால் விஜேநாயக்க

போர்க்குற்றங்கள் – மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் – லால் விஜேநாயக்க

by admin

இலங்கையில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் என மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ள அவர் போர்க்குற்ற விசாரணைகளை நடத்துமளவிற்கு இலங்கைக்கு போதிய அனுபவம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக உள்ள நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்திற்குள் பொறுப்புக் கூறலை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் என்ற போதிலும்    அரசாங்கம் இது தொடர்பில்  தொடர்ந்தும் அலட்சியமாக செயற்படுமாயின்  பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More