175
மெக்ஸிக்கோவின் பிரபல பாடகர் Pepe Aguilar இன் புதல்வர் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க சுங்க அதிகாரிகள் இவ்வாறு பிரபல பாடகரின் புதல்வாரன Jose Aguilar ஐ கைது செய்துள்ளனர்.
Jose Aguilar தனது காரில் சட்டவிரோதமான முறையில் நான்கு சீன பிரஜைகளை அமெரிக்காவிற்குள் கடத்த முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Jose Aguilar இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கைது செய்யப்பட்டாலும் இது பற்றிய விபரங்கள் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love