Home இலங்கைமஹிந்த ராஜபக்ஸ கண்ணீர் மல்க நேரிடும் – ரணில்

மஹிந்த ராஜபக்ஸ கண்ணீர் மல்க நேரிடும் – ரணில்

by admin


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்ணீர் மல்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் 2018ம் ஆண்டு இலங்கையில் வெசாக் பௌர்ணமி அனுட்டானங்கள் மேற்கொள்ளப்படும் போது மஹிந்த ராஜபக்ஸ கண்ணீர் மல்க நேரிடும் என கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக மஹிந்த கூறியிருந்தார் எனவும் தற்போது இரண்டு வெசாக் பௌர்ணமிகளுக்குள் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக கூறியுள்ளார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மஹிந்த ராஜபக்ஸவே கண்ணீர் சிந்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More