Home இலங்கைஇலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் – சசி தரூர்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் – சசி தரூர்

by admin

இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கக் கூடிய  சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென  இந்திய எழுத்தாளரும் இந்திய மாநிலங்களவை உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.   நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கடந்த முப்பது வருட காலங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் மக்கள் பாரிய துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும்  அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது எனவும் இலங்கை அரசியலமைப்பு உருவாக்க பணிகளில் இந்தியாவின் அனுபவங்களை இலங்கை அரசாங்கம் உள்வாங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More