146
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் காயடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைப் படையை சேர்ந்த ஐந்து பேர் காவல் அதிகாரி ஒருவரின் வீட்டினுள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஏனைய இருவரும் தம்முடன் இணைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் 10 பேர் காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Spread the love