175
பிரதான கட்சிகளின் சொத்து விபரங்களை வெளியிட முடியாத நிலைமை காணப்படுகின்றது என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றினால் பயன்படுத்தப்படும் பெருந்தொகைப் பணம் கறுப்புப் பணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொனகராலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ள அவர் பிரதான இரண்டு கட்சிகளுமே ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love