விவசாயக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளமையானது கடன் கொள்கைக்கு எதிரான செயற்பாடு என என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன்களை ரத்து வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தால் அது கடன் வழங்கும் ஒழுங்கு முறையை பாதிக்கும் எனவும் அத்தகைய கடன் ரத்து என்பது கடன் கொள்கைக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ள அவர் இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நேர்மையான முறையில் கடன் பெறுவதை பாதிக்கும் வகையில் குறித்த விவசாயக் கடன் ரத்து செயற்பாடு காணப்படுவதோடு, நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.