சிரிய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காண முயற்சிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் Jean-Marc Ayrault இதனைத் தெரிவித்துள்ளார். ராஜதந்திர ரீதியில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமெனவும், இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளி;க்கப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் சிரியா குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் சிரிய அரசாங்கப் படையினர் நடத்திய இரசாயன ஆயுத தாக்குதலில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்த சம்பவமானது பாரியளவில் விமர்சனங்களை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.