அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பில் ரஸ்யா அதிருப்தி வெளியிட்டுள்ளது. சிரியாவின் மீது அமெரிக்கா, சுமார் 60க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. மத்திய தரைக் கடலில் நிலை கொண்டுள்ள இரண்டு போர்க் கப்பல்களின் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரஸ்யா உறுதியளித்துள்ளது. இரசாயன தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் சிரிய விமான முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment