2008ம் ஆண்டு முதல் மத்திய வங்கி பிணை முறி குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். பெர்பசுவல் ட்ரஸரீஸ் நிறுவனம் ஏதேனும் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அது குறித்து 2008ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜூன் மகேந்திரன் பதவி ஏற்றுக் கொள்ள முன்னதாகவே பெர்பசுவல் ட்ரஸரீஸ் நிறுவனம் லாபமீட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உட்ச்சந்தை கசிவு மூலம் குறித்த நிறுவனம் லாபமீட்டியது என்றால் 2008ம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்திற்கு யார் தகவல்களை கசிய விட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.