Home இலங்கைஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதியை ஆய்வு செய்யும் வகையில் விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதியை ஆய்வு செய்யும் வகையில் விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

by admin


ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதியை ஆய்வு  செய்யும்  வகையில் விசேட பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று  இலங்கைக்கு வந்துள்ளது.  இலங்கையில் நிலவும் அரசியல் நிலைத்தன்மை, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்டவற்றை  குறித்த குழுவினர் ஆராயவுள்ளனர்.

ஏற்கனவே சில பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு வந்து கண்காணிப்புகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களின் பரிந்துரைகளுக்கமைய இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைககள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த வரிச்சலுகை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 19 ஆம் திகதி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More