170
மதுபானம் சிரகட் வகைகளின் ஊடான வரி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு மதுபானம் மற்றும் சிகரட் வகைகளின் ஊடான வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வரி வருமானம் வீழ்ச்சியடைந்த போதிலும், அது எதிர்கால சந்ததிக்கான ஒர் முதலீடாகவே நோக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் போதையிலிருந்து நாட்டை பாதுகாக்கும் ஓர் பின்னணியை அரசாங்கம் உருவாக்கும் எனவும் நாட்டின் அபிவிருத்திக்கான பிரதான சுட்டிகளாக கல்வியும் சுகாதாரமும் அமைந்துள்ளதாகவும்; தெரிவித்துள்ளார்.
Spread the love