Home இலங்கைஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 130 இலங்கைப் படையினர் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு

ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 130 இலங்கைப் படையினர் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு

by admin


ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 130 இலங்கைப் படையினர் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை அமைதி காக்கும் படையினர் 12 வயதான சிறுவர் சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சர்வதேச ஊடகமொன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைதி காக்கும் படையினருக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தண்டனை விதிப்பதில்லை எனவும், படையினர் எந்த நாட்டை பிரதிநிதித்துவம் செய்கின்றார்களோ அந்த நாடு தண்டனை விதிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு காலப் பகுதி வரையில் 134 இலங்கை அமைதி காக்கும் படையினர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More