Home இலங்கைவீட்டுத்திட்டத்தில் சில குளறுபடிகள் காணப்பட்டால் முறையிடுமாறு கே .கே. மஸ்தான் கோரிக்கை

வீட்டுத்திட்டத்தில் சில குளறுபடிகள் காணப்பட்டால் முறையிடுமாறு கே .கே. மஸ்தான் கோரிக்கை

by admin

மீள்குடியேற்ற செயலணியினால் வழங்கப்படவுள்ள வீடுகளுக்கான புள்ளி வழங்களில் அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் அதிகாரிகளிடம் தயக்கமின்றி தெரிவிக்குமாறும்  நீதி  கிடைக்கவில்லையாயின் குறித்த விடையம் தொடர்பில் தான்  உடன் நடவடிக்கைகளை  எடுக்கவுள்ளதாக  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

மீள் குடியேற்ற செயலணியின் உப குழுவில் இணைக்கப்பட்டுள்ள கே.கே.மஸ்தான் நேற்றையதினம்  மன்னார் அடம்பன் பகுதியிலுள்ள கிராமங்களுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடிய போது   குறித்த வீட்டுத்திட்டத்தில் சில குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக மக்களால் முறையிடப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பான புள்ளிகளையும் பெயர்களையும் பொது இடங்களில் ஒட்டுமாறும் இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களது பிரச்சினைகள் வெளிக்கொணரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More