இலங்கை பிரதான செய்திகள்

காணி, அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எடுக்கப்படவில்லை – சம்பந்தனிடம் ஒப்புக்கொண்ட மைத்திரி

தமிழ் மக்­க­ளின் காணி­களை விடு­விப்­ப­தற்­கும் அர­சி­யல் கைதி­களை விடு­விப்­ப­தற்­கும் ஏற்ற நட­வ­டிக்­கை­களை ஆராய்ந்து அறி­விக்­கு­மாறு ஒரு வரு­டத்­திற்கு முன்­னரே ஜனாதிபதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­­விட்­ட­போ­தும் இது­வ­ரை­யில் ஆக்­க­பூர்­வ­மான எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்பதை வருத்­தத்­து­டன் அவரே ஒப்­புக்­கொண்­டதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகியோர் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, அவரது உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் சந்­தித்­துப் பேசிய போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்­சி­னை­களை ஆராய்ந்து  காணி­க­ளை­யும் கைதி­க­ளை­யும் எப்­போது எப்­படி விடு­விக்­கப் போகி­றீர்­கள் என  கேட்டமைக்கு அது பற்றி படைத் தள­ப­தி­க­ளு­டன் மீண்­டும் பேசுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளை திங்கட்கிழமை காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­கள் விடு­தலை, காணா­மற்­போ­னோர் விட­யம் தொடர்­பில் பாது­காப்பு அமைச்­சின் செய­லர், முப்­ப­டைத் தள­ப­தி­கள், அதி­கா­ரி­க­ளு­டன் பேச்சு நடத்­த­வுள்­ளதாகவும்  அதற்கு முன்­னோ­டி­ யா­கவே ஜனாதிபதியை சந்தித்ததாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வெசாக் தினத்தை முன்­னிட்டு தமக்கு பொது மன்­னிப்பு வழங்­கு­மாறு அர­சி­யல் கைதி­க­ள் கோரிக்­கை விடுத்தமை தொடர்பிலும் இரா.சம்­பந்­தன்,  ஜனாதிபதி மைத்திரிக்கு தெரியப்படுத்தினார்  எனவும் அதனை விரை­வு­ப­டுத்தி நட­வ­டிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link