துருக்கி சர்வஜன வாக்கெடுப்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. தற்போதைய ஜனாதிபதி தனது அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் நோக்கில் நடத்திய சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகள் மோசடிகள் நிறைந்தவை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ரையிப் எர்டோர்கன் (Tayyip Erdogan ) தனது அதிகாரத்தை தொடர்ந்தும் நீடித்துக் கொள்ளும் நோக்கில் நடத்திய சவர்வஜன வாக்கெடுப்பில் ஜனாதிபதிக்கு சாதகமான முடிவு கிடைக்கப் பெற்றுள்ளது. ரையிப் எர்டோர்கன் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்தும் நீடிக்க 51 வீதமக்கள் ஆதரவளித்துள்ளனர். இந்த சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகள் ஒரு புறத்தில் மகிழ்ச்சி ஆரவாரத்தையும் மறு புறத்தில் போராட்டங்களையும் உருவாக்கியுள்ளது.
எதிர்கட்சிகள் இந்த வாக்கெடுப்பு முடிவினை ஏற்க முடியாத எனவும், வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமன எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.