Home இலங்கைநரேந்திர மோடி மத்திய மலைநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார்

நரேந்திர மோடி மத்திய மலைநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார்

by admin

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய மலைநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வர உள்ளார். இந்த பயணத்தின் போது அவர் பெருந்தோட்ட மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆத்துடன் எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி நோர்வூட் விளையாட்டரங்கில் நரேந்திர மோடி, இலங்கை மலையக மக்களுக்கு உரையாற்ற உள்ளார் எனவும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி  மற்றும் பிரதமர் ஆகியோரும் பங்கேற்பார்கள் எனவும் அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மத்திய மலைநாட்டுக்கு பயணம்; செய்வது தமக்கும் மலையக மக்களுக்கும் பெருமிதம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்திய பிரதமரை வரவேற்கும் ஏற்பாடுகளை தாமே பொறுப்பேற்று முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More