சிறு அளவிலான நீர்மின் உற்பத்தி நிலையங்களிற்கு அருகில் மேற்கொள்ளப்படும் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளது.
தற்போது தேசிய சிறு அளவிலான நீர்மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக 340 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படுகின்றது. இதனை 550 மெகாவோட்டுக்களாக அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை இனங்காணல், தேசிய நீர்மின் உற்பத்தி நிலைய அபிவிருத்தியாளர்கள் அந்த துறையில் எதிர்நோக்கும் சவால்கள், புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்திக்கான தேசிய இலக்கினை எட்டுவதற்கான புதிய செயன்முறைகளை இனங்காணல், சூழல் சமநிலை பேணப்படும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான புதிய முறைகளை இனங்காணல் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி சிறுஅளவிலான நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கான அனுமதிச் சான்றிதழ்களை வழங்கும்போது புதிய தொழில்நுட்ப முறைகளை அதன்பொருட்டு உபயோகிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.