மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தனிவீட்டு திட்டத்தின் தொடர்ச்சியாக 2017ம் ஆண்டில் நிர்மாணிக்கப்படவிருக்கும் தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஏப்ரல் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
கேகாலை மாவட்டம் திவுறும்பிடிய வேளாங்கல தோட்டத்தில் 32ம்மண்சரிவால் பாதிக்கப்பட்ட டெனிஸ்வத்த தோட்டத்தில் 48;ம் மற்றும் தனடின் தோட்டத்தில் 19 தனி வீடுகள் அடங்களாக மொத்தம் 99 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு 22ம் திகதி இடம்பெறவுள்ளது. 23ம் திகதி நுவரெலியா மாவட்டம் மவுண்ட்வேர்ணன், போகாவத்த, திம்புள்ள, கிரேட் வெஸ்டர்ன், சென் கூம்ஸ் தோட்டங்களில் மொத்தமாக 185 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
இந் நிகழ்வில் அமைச்சர் அமைச்சின் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.