அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் தயா கமகே இருப்பதாகவும் அதனாலேயே இந்த தேரர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்யவில்லை எனவும் பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இரண்டாவது தடவையாகவும் ஆக்கிரமிக்கும் முயற்சியை கடந்த வியாழக்கிழமை பௌத்த பிக்குகள் மேற்கொண்டுள்ள நிலையில் தனியார் காணிகளில் அத்துமீறி நுழைந்தவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவியிருந்த நிலையில் நேற்றைய தினம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு பௌத்த பிக்குகளும் மேலும் சிலரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் காரணமாக இப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதனையடுத்து பொலிஸார் தலையீடு செய்து விகாரை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
எனினும் அவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.அமைச்சர் தயாகமகே இந்த பின்னணியில் இருப்பதால் தேரர்களுக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளர்h.