Home இலங்கைசிறந்த தீர்வுடன் உங்களை சந்திப்பேன் என முள்ளிக்குளம் மக்களிடம் வட. மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார்:-

சிறந்த தீர்வுடன் உங்களை சந்திப்பேன் என முள்ளிக்குளம் மக்களிடம் வட. மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார்:-

by admin

முள்ளிக்குளம் மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்து, விரைவில் சிறந்த தீர்வுடன் உங்களை மீண்டும் சந்திப்பேன் என வட. மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே உறுதியளித்துள்ளார்.

நேற்iயைதினம் மன்னாருக்கு சென்ற அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது பூர்வீக நிலம் விடுவிப்பு குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்த முள்ளிக்குளம் மக்கள், தமக்கு எவ்வித உதவிகளும் வேண்டாம் எனவும், தமது பூர்வீக நிலங்களை விட்டு கடற்படையினரை வெளியேற்றி தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் எனவும் தமது நிலம் விடுவிக்கப்படும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட வடமாகாண ஆளுநர், முள்ளிக்குளம் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு மதிப்பளிப்பதாகவும் அதன்படி இப்பிரச்சினை குறித்து ஜனாதிபதியை சந்தித்து முழுமையான விபரங்களை சமர்ப்பித்து நல்லதொரு முடிவை பெற்றுக்கொண்டு சில தினங்களில் மீண்டும் முள்ளிக்குளம் வந்து உங்களை சந்திக்கின்றேன் என உறுதியளித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More