Home உலகம்ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு அமெரிக்காவில் 27 ஆண்டுகள் சிறை

ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு அமெரிக்காவில் 27 ஆண்டுகள் சிறை

by admin


அமெரிக்காவில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்களில் ஊடுருவி கடன் அட்டை மூலம் பண மோசடி செய்த ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மேற்கு வொஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான வலேரி செலெஸ்னேவ் ( Valery Seleznev) வின் மகனான 32 வயதான ரோமன் செலெஸ்னேவ்(Roman Seleznev) , கடந்த 2009-2013 ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்காவில் உள்ள சுமார் 500 பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணையதளங்களுக்குள் ஊடுருவி, வாடிக்கையாளர்களின் இரகசிய குறியீடுகள் தொடர்பான விபரங்களை சூறையாடி போலி கடனட்டைகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்றுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனால் குறித்த வா்த்தக நிறுவனங்களுக்கு  169 மில்லியன் டொலா்கள்  இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான  விசாரணை நடத்திய அமெரிக்க இரகசிய காவல்துறையினா்  கடந்த 2014ஆம் ஆண்டு மாலைத்தீவில் வைத்து ரோமன் செலெஸ்னேவ்வை கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  ரோமன் செலெஸ்னேவ்வின் சட்டத்தரணி இது தொடா்பில் மேல்முறையீடு செய்யப்போவதாக தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More