நடுவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அதிருப்தி வெளியிட்ட மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மாவுக்கு அந்த போட்டிக்கான ஊதியத்தின் பாதித்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரின் மும்பை – புனே அணிகளுக்கிடையிலான போட்டியின் போது 3 ஓட்ட வித்தியாசத்தில் வித்தியாசத்தில் புனே அணி மும்பை அணியை வென்றது.
மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தோவைப்பட்ட நிலையில் களத்தில் மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் துடுப்பாடிக்கொண்டிருந்த வேளை உனத்கண்ட் வீசிய இரண்டாவது பந்து வைடாக சென்றது. எனினும் இந்த பந்தை கள நடுவர்கள் வைட் என அறிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த ரோகித் சர்மா இரண்டு நடுவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ரோகித் சர்மாவின் இந்த செயல் போட்டி விதிமுறைகளை மீறிய செயல் என தெரிவித்துள்ள ஐ.பி.எல் நிர்வாகம், அந்த போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் தொகையை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.