Home இலங்கைஜனாதிபதி மைத்திரி உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றார் – சாபர் சௌத்ரி

ஜனாதிபதி மைத்திரி உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றார் – சாபர் சௌத்ரி

by admin


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றார் என அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் சாபர் சௌத்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஜனநாயகத்தை உறுதி செய்வதில் உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னுதாரணமாக திகழ்கின்றார் என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை குறைத்துக் கொண்டு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் எனவும்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போது சௌத்ரி இதனைத் தெரிவித்துள்ளார். புகையிலை உற்பத்திகளுக்கு எதிராக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளையும் வரவேற்பதாகவும் சில நாடுகளின் பாராளுமன்றங்கள் நிறைவேற்று அதிகாரத்தினால் மலினப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More