167
உலகின் முதனிலை டென்னிஸ் வீரர் அண்டி மரே பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்றில் அவுஸ்திரேலிய வீரர் பேர்னாட் ரொமிக்கை மரே எதிர்த்தாட உள்ளார். 2005ம் ஆண்டில் தனது பதினேழு வயதில் மரே முதல் தடவையாக பார்சிலோனா ஓபன் போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரித்தானியாவின் முதனிலை டென்னிஸ் வீராங்கனை கைல் எட்மன்ட் பார்சிலோனா ஓபன் போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் டொமினிக் தெய்ம் 6-1 6-4 என்ற செற் கணக்கில் , கைல் எட்மன்டை வீழ்த்தியுள்ளார்.
Spread the love