Home இலங்கைசுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

by admin

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம்  மாதம் மூன்றாம்திகதி   வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலைப்பபடுத்தப்பட்டபோது   அவர்களை எதிர்வரும் ஐந்தாம்  மாதம் மூன்றாம்திகதி   வரை  விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More