151
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பத்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலாச்சாரம், சமூகம், வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love