157
சிரிய அரச படையினர் விச வாயு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் புலனாய்வுத் தகவல்களின் ஊடாக இந்த விடயம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 4ம் திகதி ஜனாதிபதி பசர் அல் அசாட்டிற்கு ஆதரவான படையினர் நடத்திய தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
பிரான்ஸ் படையினர் இந்த விடயம் குறித்து மிகவும் விரிவான விசாரணைகளை நடத்தியுள்ள நிலையில் சாரீன் என்றழைக்கப்படும் ஒரு வகையிலான நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய வாயுத் தாக்குதல்களே நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love