Home இலங்கைஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கும் – ஹர்ஸ டி சில்வா

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கும் – ஹர்ஸ டி சில்வா

by admin


இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் கிடைக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சிலர் இலங்கைக்கு வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்படக் கூடாது என கோரியுள்ளமை வெற்றியளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தற்போது பிரசல்ஸிற்கு பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சலுகைத் திட்டத்தை வழங்கக் கூடாது என முன்வைக்கப்பட்ட யோசனையை மிக எளிதில் தோற்கடிக்க முடியும் எனவும் பெரும்பான்மை ஆதரவுடன் இலங்கைக்கு வரிச் சலுகைத் திட்டம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வரிச் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More