போராட்டங்களை நடத்தி வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாகத் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்வாகம் செய்யப்பட்ட வடக்கு கிழக்கின் முக்கிய பாதுகாப்பு நிலைகள் 15லிருந்து படையிரை வெளியேற்ற முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவாளர்களைப் பயன்படுத்தி தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நந்திக்கடல், மட்டுவால், கேப்பிலாமடு, இரணைமடு புலிகளின் விமான ஓடுபாதை, முள்ளிக்குளம் உள்ளிட்ட முக்கிய புலிகளின் நிலைகளிலிருந்து படையினரை வெளியேற்றவே இவ்வாறு இரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.